வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-07-16 16:32 GMT

தர்மபுரி சாலை விநாயகர் கோவில் பகுதியில் இருந்து வரும் சாலை அரசு மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள மின் மயானம் முன்பு தர்மபுரி- சேலம் பிரதான சாலையுடன் இணைகிறது. இந்த பகுதியில் 2 சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் ஒரே இடத்தில் இணைவதால் இங்கு வேகமாக வாகனங்கள் வரும்போது விபத்தில் சிக்குகின்றன. இதை கருத்தில் கொண்டு சாலை விநாயகர்கோவில் சாலை மின்மயானம் அருகே பிரதான சாலையுடன் இணையும் இடத்திற்கு சற்று முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்