மதுபிரியர்களால் இடையூறு

Update: 2023-07-16 16:31 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் பூமாலை வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டே உள்ளன. இதனால் அந்த இடம் மது பிரியர்களின் கூடாரமாக மாறி விட்டது. மேலும் குடித்து விட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்வதால் அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எந்த நேரத்தில் அங்கு சென்றாலும் மதுபாட்டில்களுடன் ஒரு கூட்டமே அமர்ந்திருக்கிறது. எனவே அங்கு போலீசார் அடிக்கடி ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்