ஆபத்தான பள்ளம்

Update: 2023-07-16 14:51 GMT


கோவை புலியகுளம் பெரிய விநாயகர் கோவில் அருகில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் இங்கு இந்த பெரிய பள்ளத்தினால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும் பள்ளத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான பள்ளத்தை மூடி சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்