நாகை மாவட்டம் தெத்தி கிராமத்தில் உள்ள தெருக்களில் முறையான சாலை வசதி இல்லை. பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மண்பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?