விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலைப்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.