விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் சாலை சேதமடைந்து மிகப்பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளதால் அவர்கள் அவ்வழியாக செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பள்ளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்களா?