பெருந்துறை பள்ளபாளையம் அருகே எல்லீஸ்பேட்டை, அண்ணாக்காலனி பகுதியில் உள்ள மண் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகிறார்கள். சிரமத்துடன் சாலையை கடந்து சென்று வருகிறார்கள். 108 ஆம்புலன்ஸ் செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே எங்கள் பகுதியில் தார்சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?