திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட சாலைபோடும் பணி இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. வாகனங்களில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றார்கள். இரவு நேரங்களில் அடிக்கடி சாலை விபத்தும் நடக்கிறது. எனவே, சாலை பணியை உடனடியாக அமைக்க வேண்டும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.