குண்டும் குழியுமான சாலை

Update: 2023-07-12 10:10 GMT


திருப்பூர் பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகர் செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. அப்படியே இருசக்கர வாகனத்தில் அவர்களை அழைத்து சென்றாலும் வாகனம் பழுதாகி விடுகிறது. அல்லது பஞ்சராகி விடுகிறது. அந்த அளவுக்கு சாலை மிகவும் ேமாசமாகி விட்டது. அதுவும் மழை காலங்களில் எது குளம், எது சாலை என்று சொல்ல முடியாத அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே குண்டும் குழியுமான ச ாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்