வேகத்தடை வேண்டும்

Update: 2023-07-09 13:50 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வேளுக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்