கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில் சிக்னல் அருகே உள்ள வளைவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தார்சாலை போடப்படவில்லை. குறுகலான குறிப்பிட்ட தூரம் மட்டுமே தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீதுதான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை விரிவாக்கம் செய்தும் பயன் இல்லை. எனவே அந்த இடத்திலும் தார்சாலை அமைக்க வேண்டும்.