வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-07-09 07:51 GMT

குளச்சலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் கூட்டுமங்கலம் உள்ளது. அந்த பகுதியில் மக்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 2 பேர் வித்தில் இறந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் மக்கள் சாலையை கடக்கும்போது அச்சத்துனேயே சென்று வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படாமல் இருக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் பஸ்நிறுத்தம் பகுதியிலும், 200 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்பார்மர் பகுதியிலும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விபத்து பகுதி என சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகைகளையும் அமைக்க வேண்டும்.

-தேவிசக்தி,குளச்சல்.

மேலும் செய்திகள்