ஆனைமலையை அடுத்த சேத்துமடையில் இருந்து சர்க்கார்பதிக்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்து ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.