விருத்தாசலம் தாலுகா மணவாழநல்லூர் கிராமத்தில் சாலை படுமோசமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அங்கு புதிதாக தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.