விழுப்புரம்-பண்ருட்டி சாலை, கோலியனூர் கூட்டுரோடு முதல் கள்ளிப்பட்டு வரை உள்ள சாலை சேதமடைந்து ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.