விழுப்புரம் அரசு தலைமை போக்குவரத்துக்கழகம் பின்புறம் உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி மருதம் வீதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவரி மூடப்படால் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.