கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் சாமல்பள்ளம், சின்னாறு போன்ற பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பு பலகைகள் எதுவும் இல்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த வேகத்தடைகள் இருக்கும் சில தூரத்திற்கு முன்பாக வேகத்தடைக்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.