கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் சாலையில் சங்கனூர் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் மழை பெய்யும்போது, அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் கழிவுநீரும் கலப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாலத்தில் மழைநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.