சாலையில் குழி

Update: 2023-07-02 10:37 GMT

கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து சிக்னல் அருகே குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் குழி மூடப்படாமல் கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பணியை விரைந்து முடித்து குழியை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்