நாகை மாவட்டம் மருங்கூர்-நெய்குப்பை சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.