மன்னார்குடி-திருவாரூர் சாலையில் ஐவர்சமாதி அருகே ராமாபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?