திருவள்ளூர் பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் திருவேற்காட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றார்கள். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. புதிய சாலை அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.