தர்மபுரி அரசுஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் அருகே நிழற்குடையுடன் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தின் முன் பகுதியில் உள்ள கான்கிரீட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இங்கு பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் தடுமாறி கீழே விழும் சூழல் அவ்வப்போது ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த பகுதியில் உள்ள சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.