கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா அருகில் பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை உள்ளன. இந்த சாலைகள் ஒரு வழிப்பாதைகள் உள்ளன. ஆனாலும் பல வாகன ஓட்டிகள் சாலையின் எதிரே அசுர வேகத்தில் வந்து விபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் ஒரு வழிப்பாதையில் எதிரில் வந்து விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள். ஒரு வழிப்பாதை என காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைத்தும் அதை பின்பற்றாமல் எதிரில் வந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த சாலைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து ஒரு வழிப்பாதையை வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றுமாறும், போக்குவரத்து விதிமுறைகளைமீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.