வேகத்தடை அவசியம்

Update: 2023-06-28 09:34 GMT
சேலம் மாவட்டம் நங்கவள்ளி  பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் தெப்பகுளம் விநாயகர் கோவில் அருகில் ஒரு வேகத்தடையும் மற்றும் நங்கவள்ளி சிவன் கோவிலுக்கு செல்லும் வளைவு ரோட்டிற்கு முன்பு ஒரு வேகத்தடையும் நெடுஞ்சாலை ரோட்டில் நீக்கப்பட்டுள்ளது. இந்த இடமானது முக்கிய போக்குவரத்து உள்ள இடம். மேலும் இங்கு கட் ரோடு உள்ளது. வேகத்தடையை அகற்றியதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எடுக்கப்பட்ட வேகத்தடையை மீண்டும் அங்கு அமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்