பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் இருந்து ஊரக்கோணம் செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையின் கரை பகுதி மழையினால் சேதமடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையின் கரை பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.