கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் வணிக வளாகம் உள்ளது. இங்கு உள்ள கடைகளில் யாரும் வராத நிலையில் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். இவர்களால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக மது பாட்டில்களை அந்த பகுதியிலேயே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.