கோவை கவுண்டம்பாளையம் அருகே வையம்பாளையத்தில் பள்ளி, கோவில் உள்ள பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுகின்றன. இதை அறியாமல் பள்ளி மாணவர்கள், பக்தர்கள் சாலையை கடக்க முயலும்போது, வாகனங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்று நடந்த விபத்துகளில் சிலர் காயம் அடைந்து உள்ளனர். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.