சேதமடைந்த சாலை

Update: 2023-06-21 17:15 GMT

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள சாலையை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மழை காலங்களில் இந்த பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்