இந்திய அளவில் பிரசித்தி பெற்ற செஞ்சி கோட்டையில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கோட்டைக்கு செல்லக்கூடிய சாலைகள் பலத்த சேதமடைந்த காணப்படுவதால், நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே கோட்டைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்கின்றனர்.