விபத்து அபாயம்

Update: 2023-06-21 09:31 GMT

கோவை பீளமேடு ஹாட்கோ காலனி நான்கு முனை சந்திப்பில் குடிநீர் குழாய் அமைக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. தற்போது அந்த பள்ளத்தை சரி செய்து, அதில் மூடி அமைக்காமல், திறந்த நிலையில் ஒரு பெரிய குழாயை வைத்து அடைத்து உள்ளனர். இது அந்த வழியாக செல்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை விட்டு சற்று விலகினாலும், அதன் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்