தர்மபுரி-சேலம் சாலையில் இலக்கியம்பட்டி பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விளம்பர பலகைகளை சாலைகளை ஆக்கிரமித்தபடி போக்குவரத்துக்கு இடையூறாக வைத்து உள்ளனர். இதனால் சாலையோர பகுதியில் வாகனங்களில் வருபவர்கள் இந்த பலகைகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு சாலையை ஒட்டி நிறுவன பலகைகள் வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.