கிருஷ்ணகிரி நகரில் சென்னை, பெங்களூரு, சேலம் உள்பட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. கிருஷ்ணகிரி நகர சாலைகளில் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றன. நகராட்சி சார்பில் அடிக்கடி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட போதிலும், தொடர்ந்து கால்நடைகளை சாலையில் அவிழ்த்து விடுகிறார்கள். எனவே சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?