குமராட்சி அருகே திருநாரையூர் கிராமம் கிழக்கு காலனியில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.