கோவை புலியகுளம் பகுதியில் இருந்து சவுரிபாளையம் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அங்கு ஆங்காங்கே ஆபத்தான குழிகள் நிறைந்து உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் நடந்து செல்வோரும் நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.