இருளில் மூழ்கும் சாலை

Update: 2023-06-14 17:15 GMT

தர்மபுரி- சேலம் சாலையில் இலக்கியம்பட்டி பகுதியில் அதிக கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. காலை முதல் இரவு வரை அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் சாலையில் இருபுறங்களிலும் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்