மேல்மலையனூர் அருகே கீழ்செவலாம்பாடி பகுதி பஜனகோவில் தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே புதிதாக அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டு்ம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.