குண்டும், குழியுமான சாலை
சேவூர் பந்தம்பாளையத்திலிருந்து,சுண்டக்காம்பாளையம் வழியாக அன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் இணைப்பு தார் சாலை 4 கி.மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்து பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே இதே நிலையில் உள்ளது. இந்த நிலையில் மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி நின்று இந்த சாலையானது மேலும் பழுதடைந்து வருகிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாகி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் குழி தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தார் சாலை குழியை மூடி சீரமைக்க வேண்டும்.
ஆனந்த்,ேசவூர்.
9994413004