சாலையில் குழி

Update: 2023-06-14 09:21 GMT

கோவை விளாங்குறிச்சியில் இருந்து காபி கடை பகுதிக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. அந்த பணி நிறைவு பெற்ற பிறகும் சாலையில் தோண்டிய குழியை மூடவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்