விழுப்புரம் கோலியனூர் கூட்டுரோடு முதல் கள்ளிப்பட்டு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து பல்லாங்குழி போல் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.