சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-11 17:29 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் தேவரடியார்குப்பம் கிராமத்தில் இருந்து அத்தியந்தல் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்