விபத்து அபாயம்

Update: 2023-06-11 16:40 GMT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர், பெங்களூரு நகரங்களுக்கு செல்கின்றன. குறிப்பாக வட மாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக லாரிகள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்