தர்மபுரி 4 ரோடு பகுதியில் பென்னாகரம் சாலையில் மேம்பாலம் வரை அமைந்துள்ள தார்சாலையின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் தோண்டப்பட்ட தார்சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?