மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோட்டாசன் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலை உள்ளது. இந்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.