தாரமங்கலம் அண்ணா சிலையில் இருந்து தேர் நிலையம் வந்து செல்லும் வழியில் சந்தை பேட்டை உள்ளது. தனியார் மருத்துவமனை அடுத்த கலைஞர் சிலை அருகே நான்கு ரோடு பிரிகிறது. அதிக போக்குவரத்து உள்ள பகுதி என்பதால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாகவும் வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.