ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை முதல் சாயக்கார ஊரணி வரையிலான சாலையில் அதிக அளவில் மணல் மேவி காணப்படுகிறது. இதனால் ஏற்படும் புழுதி மற்றும் காற்று மாசால் இப்பகுதியில் உள்ளவர்களும் இருசக்கர வாகனத்தில் செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள மணலை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.