கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் பல இடங்களில் சாலையில் குண்டும், குழியுமாக இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி'புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தற்போது பெங்களூரு சாலையில் ரவுண்டானா அருகிலும், கே தியேட்டர் பிரிவு சாலை அருகிலும் சேதமடைந்து இருந்த சாலையை சீரமைத்து உள்ளனர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.