தர்மபுரியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையில் பாப்பாரப்பட்டி பிரிவு சாலை பகுதியில் 4-வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் பாப்பாரப்பட்டிக்கு செல்லும் சாலை தொடங்கும் இடத்தில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்யும் போது மழை நீர் தேங்குவதால் இந்த பகுதியில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் தடுமாறியபடி சென்று வருகின்றன. எனவே சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.