கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே குழி ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக இரவில் வரும் வாகன ஓட்டிகள் நடுரோட்டில் குழி இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சாலையில் ஏற்பட்டு உள்ள குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.