பெங்களூரு சம்பங்கி சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. எனினும் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை விதிமுறைகளை மீறி அங்கேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் விபத்துகள் நடக்கின்றன. எனவே போக்குவரத்து போலீசார், அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.